மேலும்

தாஜுதீன் கொலை – மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மூன்று மணிநேரம் விசாரணை

Kapila Gamini Hendawitharanaரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம், மூன்று மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக நேற்று முன்தினம் மாலை, மேர் ஜெனரல் கபில் ஹெந்தவிதாரணவிடம், மூன்று மணிநேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியதாக, மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாஜுதீன் இறந்த பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண அவரது தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விபரங்களை, தொலைத்தொடர்பு வலைமைப்பு ஒன்றிடம் இருந்து பெற்றிருந்தார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போதிலும், அந்த விபரங்களைக் கோர வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை என்று , குற்றப் புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஏற்கனவே பல காவல்துறை அதிகாரிகளை விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *