மேலும்

வடக்கில் இன்றும் இராணுவ ஆட்சி – சிறிலங்கா அதிபர், பிரதமரிடம் முறையிடவுள்ளார் விக்னேஸ்வரன்

cm-Wigneswaranவடக்கில் இடம்பெற்று வரும் இராணுவத்தினரின் காணி அபகரிப்புகள் மற்றும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து, முறையிடுவதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.

வரும் 18ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், வடக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த தகவலை அவர் நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் சிறப்பு  அமர்வில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

வடக்கில், பொதுமக்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக அபகரிக்க மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகள் குறித்தும், முல்லைத்தீவு மாவட்டத்தில், சிங்கள மீனவர்களின் அத்துமீறலுக்கு சிறிலங்கா படையினர் உதவியாகச் செயற்படுவது குறித்தும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்தும், நேற்று வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால் கவலைகள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து, உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்த விடயங்கள் தொடர்பாக, எதிர்வரும் 18ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்து முறையிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கில், மகிந்த ராஜபக்ச காலத்து இராணுவ ஆட்சியை ஒத்த அராஜக ஆட்சியே இன்னமும் தொடர்வதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *