மேலும்

மாதம்: March 2016

எட்கா உடன்பாட்டு வரைவு புதுடெல்லியிடம் கையளிப்பு

எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான சிறிலங்காவின் வரைவு புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அஸ்கிரிய பீடாதிபதி நேற்றிரவு காலமானார்

சிறிலங்காவின் முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், வண.கலகம அட்டஸ்சி தேரர் (வயது94) நேற்றிரவு கண்டியில் காலமானார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்கள் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்  தசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியது.

மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவியும், 1960களில் நடந்த சத்தியாக்கிரக போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவருமான மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் (வயது 82) நேற்றுமாலை லண்டனில் காலமானார்.

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு அங்கீகாரம்

புதிய அரசியலமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

புலிகளிடம் கைப்பற்றிய 80 கிலோ தங்கம் சிறிலங்கா இராணுவத்திடம் – 40 கிலோவைக் காணவில்லை

போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்திடம் இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மற்றொரு அமைச்சர் மட்டக்குழு சீனா பயணம் – உறவுகளைப் பலப்படுத்த முயற்சி

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவின் அமைச்சர் மட்டக் குழுவொன்று பீஜீங் சென்றுள்ளது.

ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கிறதா மலேசியா? – பி.இராமசாமி

முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரை மலேசியா தனது நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆட்சேர்த்துக் கொள்ளுமாயின், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயங்கர மீறல்களை மலேசியா அசட்டை செய்துள்ளது என்ற அவப்பெயரைச் சம்பாதிக்க வேண்டியேற்படும். 

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா தொடர்பாக நாளை அறிக்கை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார்.