சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் உதவி – அமெரிக்க குழு மைத்திரியை சந்திப்பு
சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் (மிலேனியம் சவால்) திட்டத்தின் கீழ் மீண்டும் உதவியளிக்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்த உயர்மட்டக் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.


