மேலும்

மாதம்: March 2016

வெடிபொருள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் கிளிநொச்சியில் கைது

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில், தற்கொலைத் தாக்குதல் அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட, வீட்டில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் இன்று கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மைத்திரியைப் படுகொலை செய்யச் சதி? – யாழ்ப்பாண பயணம் ரத்து

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகம்  ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் மீட்பு – கிளம்பும் சந்தேகங்கள்

சாவகச்சேரி – மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி, மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆறுமுனைப் போட்டியில் பலசாலி யார்? – மாலன்

ஆறுமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., விஜயகாந்த் அணி, பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய ஆறு அணிகள் அணி வகுத்து நிற்கின்றன.

திடீர் மின்வெட்டினால் இருளில் சிக்கிய சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உரையாற்றிக் கொண்டிருந்த போது, மின்வெட்டு ஏற்பட்டதால், இருளில் தனது உரையை தொடர வேண்டிய நிலைக்கு உள்ளானார். இந்தச் சம்பவம் நேற்று, வடமேல் மாகாணசபையில் இடம்பெற்றது.

அமெரிக்கா நடத்திய கருத்தரங்கை பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு

அரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில், மிகக் குறைந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர்.

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலக செயலாளராக மனோ திட்டவெல

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகமாக மனோ திட்டவெல நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – 150 ரூபாவை எட்டுகிறது டொலர்

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று 149 ரூபாவைக் கடந்துள்ளது.

நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்

நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.

சுதந்திரக் கட்சிப் பதவி வேண்டாம் – கோத்தா நிராகரிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி ஒன்றை சலுகையாக வழங்கினால் அதனைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.