மேலும்

பாரீசில் சிறப்புற நடந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு (ஒளிப்படங்கள்)

ki-pi-ninaiventhal-paris (1)ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

நேற்று பிற்பகல் 4 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில்,  கி.பி. அரவிந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு மலர் வெளியிடப்பட்டது.

அத்துடன் ஆய்வாளர் பி.ஏ.காதர், செழுங்கலைப் புலவர் குமரன், கலைஞரும் எழுத்தாளருமான நாச்சிமார் கோவிலடி ராஜன், பத்திரிகையாளரும், படைப்பாளியுமான குணா கவியழகன், ஊடகவியலாளரும், தமிழ்-3 வானொலி நெறியாளருமான றூபன் சிவராசா, முன்னைநாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடத் தலைவர் பாலசுகுமார் ஆகியோரின் நினைவுரைகளும், நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ki-pi-ninaiventhal-paris (1)ki-pi-ninaiventhal-paris (2)ki-pi-ninaiventhal-paris (3)ki-pi-ninaiventhal-paris (4)ki-pi-ninaiventhal-paris (5)ki-pi-ninaiventhal-paris (6)ki-pi-ninaiventhal-paris (7)ki-pi-ninaiventhal-paris (8)ki-pi-ninaiventhal-paris (9)ki-pi-ninaiventhal-paris (10)ki-pi-ninaiventhal-paris (11)ki-pi-ninaiventhal-paris (12)ki-pi-ninaiventhal-paris (13)ki-pi-ninaiventhal-paris (14)ki-pi-ninaiventhal-paris (15)

இந்த நிகழ்வில், கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

ஒளிப்படங்கள் – றூபன் சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *