மேலும்

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா, அமெரிக்கத் தூதுவர்கள்

atul-prasad (2)அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் இன்று கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகம் வந்து சேர்ந்தது.

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் இன்று இந்தப் போர்க்கப்பலைச் சென்று பார்வையிட்டார்.

atul-prasad (2)

சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும் அவருடன் சென்றிருந்தார்.

இதன்போது, அமெரிக்கப் போர்க்கப்பலின் செயற்பாடுகள் மற்றும் அதிலுள்ள வசதிகள் தொடர்பாக, அமெரிக்க கடற்படை அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *