சரணடைந்தோரின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு 58ஆவது டிவிசனுக்கு நீதிமன்றம் உத்தரவு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது, தம்மிடம் சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.