மேலும்

நாள்: 25th February 2016

தாஜுதீன் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு – ராஜபக்ச குடும்பத்துக்கு அடுத்த பொறி?

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம், குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ், கொலை போலத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ், சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கு இணைந்த ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப்பகிர்வு – சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம்

புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த, ஒரு தனி அலகு என்னும் அடிப்படையில் ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்று, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம், யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார் சரத் பொன்சேகா

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதவியேற்றுள்ளார்.

யோசிதவுக்கு மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியல்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு மாதங்களுக்குள் சம்பூர் அனல் மின்நிலைய கட்டுமானப்பணிகள் ஆரம்பம்

சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காலனித்துவ நாடாக மாறுகிறது சிறிலங்கா – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

கலிங்கப் பேரரசின் காலத்தைப் போன்று, மீண்டும் இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

சிறிலங்காவில் 22,254 தமிழ் பௌத்தர்கள், 11 தமிழ் பிக்குகள் – நாடாளுமன்றில் தகவல்

சிறிலங்காவில் தற்போது, 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு முயற்சிகளை எவரும் குழப்பக் கூடாது – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டது சிறிலங்கா – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஆண்டு பதவியேற்றபோது, மனித உரிமைகள் தொடர்பாக கொடுத்திருந்த வாக்குறுதிகள் பலவற்றைக் காப்பாற்றத் தவறியிருப்பதாக, அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது.

இன்று அமைச்சராகப் பதவியேற்கிறார் சரத் பொன்சேகா

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.