மேலும்

நாள்: 12th February 2016

சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாம் நிலைப் பதவியைப் பிடித்தார் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் தொடரும் இராணுவமயமாக்கம்

அண்மையில் சிறிலங்காவிற்கான எனது பயணத்தின் போது நான் பெருமளவான இராணுவ வீரர்களின் பிரசன்னத்தை அவதானித்தேன். இது உண்மையில் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவர்கள் வாகனங்களில் அடிக்கடி செல்வதையும் நான் பார்த்தேன்.

சிறிலங்காவில் புலனாய்வு இதழியலை ஊக்குவிக்க 5 இலட்சம் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா

புலனாய்வு இதழியலை ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்பவும், சிறிலங்காவில் உள்ள ஊடக அமைப்புகளுக்கு, அமெரிக்கா ஐந்து இலட்சம் டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது.

சுமந்திரனின் சட்டமூலத்தை மாகாணசபைகளின் ஒப்புதலுக்கு அனுப்புகிறார் சபாநாயகர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட, அடிமடி வலைகளைப் பயன்படுத்தி இழுவைப் படகு மூலம் மீன்பிடித்தலைத் தடைசெய்யும், சட்டமூலத்தை, மாகாணசபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசுக்கு எதிராகப் போராட மகிந்த அறைகூவல்

நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட அனைவரையும் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத சிராந்தி – மகிந்தவும் கண்கலங்கினார்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுததுடன், மகிந்த ராஜபக்சவினது கண்களும் கலங்கிப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனைச் செயலணி – இன்று முதல் செயற்படும்

நல்லிணக்கப் பொறிமுறைகளை வடிவமைப்பதற்கான பொது கலந்துரையாடல் செயல்முறைகளை முன்னெடுப்பதற்கான இணையத்தளம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

தேஜஸ் போர்விமான கொள்வனவு குறித்து முடிவு எடுக்கவில்லை – சிறிலங்கா விமானப்படை

இந்தியாவிடமா, பாகிஸ்தானிடமா அல்லது வேறு நாட்டிடம் இருந்தா போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.