மேலும்

நாள்: 24th February 2016

இந்தியக் கடற்படை போர்க்கப்பல் உற்பத்தி பிரிவின் உயர்அதிகாரி சிறிலங்கா வருகை

இந்தியக் கடற்படையின்  போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையேற்றல் பிரிவின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பப்பி சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர் – நல்லிணக்க முயற்சிகளுக்கு பாராட்டு

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ள நியூசி்லாந்து பிரதமர் ஜோன் கீ, இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடுர சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கியது.

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கை அதிகரிப்பது குறித்து சமந்தா பவருடன் மங்கள பேச்சு

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தினார்.

ஐந்து அரசியல் கைதிகள் இன்று நீதிமன்றினால் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து தமிழ் அரசியல் கைதிகள் இன்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறிலங்காவில் தமிழர் பகுதிகளிலேயே அதிகளவு வறுமைநிலை – உலக வங்கி ஆய்வு கூறுகிறது

உலக வங்கியின் அண்மைய ஆய்வின் பிரகாரம், சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்கள் அதியுச்ச வறுமையின் பிடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பசிலுடன் முரண்பாடுகள் உள்ளன – ஒப்புக்கொள்கிறார் நாமல்

பசில் ராஜபக்ச விடயத்தில் தாமும் விமர்சனங்களைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தளம் அமைக்க அமெரிக்கா திட்டம் – திஸ்ஸ விதாரண

திருகோணமலையில் தளம் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இருப்பதாக எச்சரித்துள்ளார், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது- ஜோன் கெரி

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் திருட்டுத்தனமாக உடன்பாடு செய்து கொள்ளமாட்டோம்- ரணில்

அடுத்தமாதம் முதல்வாரம் கொழும்பு வரவுள்ள இந்தியக் குழுவுடன் நடத்தப்படும் பேச்சுக்களை அடுத்தே, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கான வரைவு தயாரிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.