மேலும்

நாள்: 23rd February 2016

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 06

ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு  எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம், விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.

யாழ்ப்பாணத்தில் நேற்று திடீரென 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை

யாழ்ப்பாணத்தில் நேற்று வழக்கத்தை விடவும் 4 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை நேற்று பதிவானதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கொழும்பு வந்தார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர்கள் சபையின் தலைவரான, தகேஹிகோ நகோ இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றுமாலை சிறிலங்கா வந்தார். அவர் நேற்று சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இனக்கலப்பு திருமண விவகாரம் – ஆளுனருக்கு முதல்வர் பதிலடி

கலப்புத் திருமணத்தின் மூலம், உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று,  வட மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில் தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுங்கள் பின்னர், கலப்புத் திருமணம் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர்.

அனுராதரபுர, மகசின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யக் கோரி,  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை  நேற்று ஆரம்பித்தனர்.

ஜேர்மனியின் சமஷ்டி முறைமையை பரிசீலிக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இனப்பிரச்சினைக்கு, ஜேர்மனியில் உள்ள சமஷ்டி ஆட்சிமுறை போன்ற தீர்வை ஏற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் இணங்கினால், அதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் தேசிய சாரணர் ஒன்றுகூடலை ஆரம்பித்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.