ஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞர் ‘மாமனிதர்’ அரசையா அவர்களின் உடல் தீயுடன் சங்கமம்
ஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞரும், கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, வாழும் காலத்திலேயே மாமனிதர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவருமான, எஸ்.ரி.அரசு மற்றும் அரசையா என அழைக்கப்படும், சிவக்கொழுந்து திருநாவுக்கரசு அவர்களின் உடல் இன்று தீயுடன் சங்கமமானது.