மேலும்

நாள்: 2nd February 2016

மைத்திரி வெளியேறிய போதே சுதந்திரக் கட்சி உடைந்து விட்டது – மகிந்த

சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2014ஆம் ஆண்டு நொவம்பர் 21ஆம் நாளே பிளவுபட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக்கூற அரசியலமைப்பில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

வெளிநாட்டு நீதிபதிகள், தீர்ப்புகளை வழங்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவைக் கலைக்க வேண்டும் – நிமால் சிறிபால டி சில்வா

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவை உடனடியாக கலைத்து விட வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா  தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை உணவைச் சாப்பிட மறுக்கும் யோசித ராஜபக்ச

நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, யோசித ராஜபக்ச உள்ளிட்ட நால்வர், சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உண்ண மறுப்பதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அபேராம விகாரையில் அரசியல் கூட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை

நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில், அரசியல் கூட்டங்களையோ, அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடைவிதித்துள்ளது.

அடுத்து கம்பி எண்ணப்போவது தானே என்கிறார் மகிந்த

அடுத்ததாக தன்னையே அரசாங்கம் கைது செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று, தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நினைவேந்தல் நிகழ்வு

காலமெல்லாம் கொட்டிக்கொட்டிப் பறை முழக்கிப் பாட்டிசைத்த மண்ணின் கலைஞர் – புதுவைப் பல்கலைக் கழக நிகழ்கலைத்துறை புல முதன்மையர், பேராசிரியர், கே.ஏ. குணசேகரன் நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஞாயிறற்றுக் கிழமை காலை ,புதுவைப் பல்கலைக் கழக கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்றது.

மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மூத்த அதிகாரி கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதியான, மைக்கல் ஜே டிலானி என்ற, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியே கொழும்பு வரவுள்ளார்.

ஏழு பேரின் விடுதலைக்காக 10 இலட்சம் பேரின் கையெழுத்துக்களைத் திரட்டும் முருகனின் தாயார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி, இலங்கையில் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி ஈடுபட்டுள்ளார்.

யோசித ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

கடற்படைத் தளபதியின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு, பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.