மேலும்

நாள்: 19th February 2016

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத் தளபதியுடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் டொனேகனுடன், பாஹ்ரெயினில் உள்ள சிறிலங்கா தூதுவர் கலாநிதி சாஜ் மென்டிஸ் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்தியாவின் சார்க் செய்மதித் திட்டத்தில் இணைய உறுப்பு நாடுகள் அச்சம் – சிறிலங்கா மட்டும் ஒப்புதல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட சார்க் செய்மதித் திட்டத்தில், இணைந்து கொள்ள சிறிலங்கா மட்டுமே இணக்கம் தெரிவித்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

யோசிதவின் சிறைக்கூடப் பகுதியில் கைத்தொலைபேசி நுண்அலைகளை தடுக்கும் கருவி

வெலிக்கடைச் சிறைச்சாலையில், யோசித ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே விடுதிப் பகுதியில் கைத்தொலைபேசி நுண்அலைகளைத் தடுக்கும் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.

கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய் ஆய்வில் இறங்குகிறது பிரெஞ்சு பல்தேசிய நிறுவனம்

சிறிலங்காவின் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட Total  என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளதாகவும், இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டதாகவும், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

மூன்று வழக்குகளில் இருந்து சிராணி பண்டாரநாயக்க விடுதலை

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் காயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா வவுனியாவில் நேற்றிரவு இனந்தெரியாத குழுவினரின் தாக்குதலில் காயமடைந்தார்.

இந்தியாவின் மற்றொரு மாநிலமாக சிறிலங்கா மாறும் – எச்சரிக்கிறார் மகிந்த

தற்போதைய நிலைமைகள் தொடர்ந்தால், இந்தியாவின் மற்றொரு மாநிலமாக சிறிலங்கா மாறும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சரணடைந்தோர் பட்டியல் 58ஆவது டிவிசனிடம் உள்ளதா என்று தெரியவில்லை – இராணுவப் பேச்சாளர்

போரின் இறுதிக் கட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும், நீதிமன்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.