மேலும்

நாள்: 16th February 2016

ஞானசார தேரருக்கு இன்றும் பிணை இல்லை – ஒரு வாரத்துக்கு மீண்டும் விளக்கமறியல்

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 23ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் – மகாநாயக்க தேரர்களிடம் வடக்கின் புதிய ஆளுனர்

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

பரணகம ஆணைக்குழுவுக்கு மூன்று மாத சேவைநீடிப்பு

காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பகைத்துக் கொண்டதே மகிந்தவின் தோல்விக்குக் காரணம் – என்கிறார் கோத்தா

மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்காமையும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

பட்டுப்பாதை திட்டம் – இலக்கை அடைய சீனா எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்

சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்ட அமுலாக்கமானது சீனாவின் எல்லைக்கு அப்பால் மிகவும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது என்பதே உண்மை. சீனாவின் நெருங்கிய கரையோர அயல்நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள தயக்கமே இத்திட்டத்தின் பின்னடைவுக்குக் காரணம்.

பதவிக்காலம் முடிந்தது – கேள்விக்குறியாகியுள்ள பரணகம ஆணைக்குழுவின் எதிர்காலம்

காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துள்ள நிலையில் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அழுத்தங்களால் அலறுகிறார் மகிந்த – மின்சார நாற்காலிக்கு அனுப்புவது மேலானதாம்

சிறிலங்கா அரசாங்கம் தன்மீது தொடர் அழுத்தங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, மின்சார நாற்காலிக்கு அனுப்புவதே மேல் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

அமெரிக்கா செல்கிறார் மங்கள சமரவீர- நல்லிணக்க செயல்முறைகள் குறித்து விளக்கமளிப்பார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதன்போது, நல்லிணக்கச் செயல்முறைகளின் முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை – முக்காற்பங்கு உறுப்பினர்களை காணவில்லை

துறை மேற்பார்வைக் குழுக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும், மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நேற்று நாடாளுமன்ற, குழுக்களின் அறையில் ஆரம்பமான நிலையில், இதில், 62 உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் அபிவிருத்தி குறித்து முழுமையான ஆய்வு – ரணில் – விக்கி சந்திப்பில் முடிவு

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக முழுமையான ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.