மேலும்

நாள்: 3rd February 2016

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒன்பதாவது இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே அவர் கொழும்பு வரவுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன், கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. 

பதவி விலகுகிறார் வடக்கு மாகாண ஆளுனர் – புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே?

வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார  இந்த மாத இறுதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது.

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

நாளை நடக்கவுள்ள சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க வரவில்லையாம் ஹுசேன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான உறவை எதிர்க்கும் நவீன பாசிசவாதிகள் – மங்கள சமரவீர

சிறிலங்காவில் உள்ள ‘நவீன பாசிசவாதிகள்’ தான் இந்தியாவுடனான நெருக்கமான உறவை எதிர்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மிக்-27 போர் விமானங்கள், எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்திகள் அணிவகுப்பில் இருந்து நீக்கம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய மிக்-27 போர் விமானங்களோ, எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளோ இம்முறை சிறிலங்காவின் சுதந்திர நாள் அணிவகுப்பில் பங்கேற்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளுக்கு நிதிசேகரித்த இலங்கைத் தமிழருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்து, நிதி சேகரித்துக் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு, ஜேர்மனி நீதிமன்றம் 18 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அதிபர் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிப்பு

பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், அதிபர் ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் நாள் வெளியிட்டுள்ளார்.