மேலும்

லசந்த கொலை சந்தேகநபர்களின் மாதிரி உருவப்படங்களை வெளியிட்டது காவல்துறை

suspects- lasantha murderசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரி உருவப்படங்களை, சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது.

கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, இந்த மாதிரி உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

முதலாவது சந்தேக நபர், 35 வயது மதிக்கத்தக்கவர் என்றும்,  5 அடி  8 அங்குல உயரமும், பிறவுண் நிற கண்களையும், வெள்ளை நிறமுடைய கட்டுடலைக் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

suspects- lasantha murder

இரண்டாவது சந்தேக நபர், கறுப்பு நிறத் தோற்றமும்,5 அடி 10 அங்குல உயரமும், கொண்டவர் என்றும், 40 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், 071 – 8591753, 071 – 8591770, 077 – 3291500 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *