மேலும்

நாள்: 11th February 2016

யோசித ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற ஆசனம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மோடியின் மாறுபட்ட நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டுள்ள சிறிலங்கா – கேணல் ஹரிகரன்

போர்க்குற்ற விசாரணை மீதான அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு அவசியமற்றது என்பதை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த மூவருக்கு 79 வங்கி, நிதி நிறுவனங்களில் கணக்குகள்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது. அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, மூன்று இராணுவ அதிகாரிகளின் 79 வங்கி மற்றும் நிதி நிறுவனக் கணக்கு விபரங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா அதிபர் ஒருபோதும் ஏற்கமாட்டார் – பைசர் முஸ்தபா

போர் தொடர்பான பொறுப்புக்கூறல் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதை சிறிலங்கா அதிபரோ, அரசாங்கமோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா.

கலப்பு நீதிமன்றத் திட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதாம் – கலங்குகிறார் மகிந்த

சிறிலங்காவில் கலப்பு நீதிமன்ற விசாரணை பற்றிய திட்டம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அடுத்த மாதம் பங்களாதேஸ் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம், பங்களாதேசுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, டாக்காவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அனைத்துலக அழுத்தங்களும், சவால்களும் இன்னமும் நீடிக்கின்றன – சிறிலங்கா அமைச்சர்

உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்கான அனைத்துலக அழுத்தங்களும் சவால்களும் இன்னமும் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார், அமைச்சர் மகிந்த சமரசிங்க.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் அத்துமீறல் – பீரிஸ்

சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அத்துமீறியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.