மேலும்

நாள்: 5th February 2016

இந்திய- சிறிலங்கா கூட்டு ஆணைக்குழுக் கூட்டம் தொடங்கியது

ஒன்பதாவது. இந்திய- சிறிலங்கா கூட்டு ஆணைக்குழுக் கூட்டம் இன்று பிற்பகல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

அலரி மாளிகையில் ரணிலை சந்தித்துப் பேசினார் சுஸ்மா – திருமலையில் முதலீடு செய்ய அழைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று பிற்பகல்  முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவை வந்தடைந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இன்று மதியம், சிறிலங்காவை வந்தடைந்தார்.

முன்னாள் புலிப் போராளிகளை கண்காணிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தக் கோருகிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதற்கான பொறிமுறையை சிறிலங்கா அரசாங்கம் வலுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தீவிரவாத முறியடிப்பு தொடர்பாக சிறிலங்கா படையினர் பாகிஸ்தானில் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா, பாகிஸ்தான், மாலைதீவு இராணுவத்தினர் இணைந்து, பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான முத்தரப்பு இராணுவப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யோசித கைது விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராய்வு

லெப்.யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், ஆராயப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நௌரு தீவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள்

நௌருவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளரான துர்க்கா*, தான் மீண்டும் அத்தீவிற்கு அனுப்பப்பட்டால் எவ்வாறான பயங்கரங்களை அனுபவிக்க வேண்டிவரும் என்பது தொடர்பாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுனர் பதவி விலகிச் செல்வது ஏன்?

தாம் இணங்கிக் கொண்ட காலப்பகுதிக்கு மேலதிகமாகவே, பணியாற்றி விட்டதால் தான், வடக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகிச் செல்ல தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார், எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார.

தமிழர்களின் உரிமைகள் குறித்து சிறிலங்கா அரசுடன் பேசுவார் சுஸ்மா

இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழரின் உரிமைகள் சார்ந்த பிரச்சினை குறித்து முக்கிய கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதுடெல்லி ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

சிறிலங்காவுடன் வலுவான உறவை எதிர்பார்க்கிறது இந்தியா – நரேந்திர மோடி

சிறிலங்காவுடன் இன்னும் வலுவான உறவுகளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.