மேலும்

நாள்: 15th February 2016

யோசித தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடப் பகுதி தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையில், லெப்.யோசித ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறைக்கூடப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டு இன்று காலை ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

யோசிதவுக்கு ஆதரவளித்த சிறிலங்கா கடற்படையினர் நால்வர் இடைநிறுத்தம்

லெப்.யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டி அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணி வீரர்கள் நால்வரை சிறிலங்கா கடற்படை இடைநிறுத்தியுள்ளது.

சியோல் விமான நிலைய கழிவறையில் தொலைந்த கடவுச்சீட்டு – நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்க்கதி

ஒன்றுகூடல் ஒன்றுக்குச் சென்றிருந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான நிலையக் கழிவறையில் தனது கடவுச்சீட்டைத் தவறவிட்டதால், தென்கொரியாவில் நடந்த, அந்த ஒன்றுகூடலின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் பங்கேற்க முடியாது போனது.

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான சாரணர் ஒன்றுகூடல்

சிறிலங்காவின் அனைத்து மாவட்ட சாரணர்களும் பங்கேற்கும், ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடல் முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முடிவு இல்லையாம் – சுதந்திரக் கட்சி கூறுகிறது

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பான எந்த முடிவையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை என்று, அந்தச் கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்கா பிரதமரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ரெஜினோல்ட் குரே நியமனத்தை வரவேற்கிறது கூட்டமைப்பு – விக்கி மௌனம்

வடக்கு மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.