சீபா உடன்பாட்டுக்கு மறுத்ததால் தான் ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்தது இந்தியா – ரம்புக்வெல
இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாடு (சீபா) செய்து கொள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மறுத்தமையினால் தான், இந்திய உளவுப் பிரிவான ரோ, சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது என்று குற்றம்சாட்டியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.