மேலும்

நாள்: 22nd February 2016

புலிகளுக்குப் பிந்திய சிறிலங்கா

போரால் பிளவுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்று வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது. ஆனால் பழைய வடுக்களை ஆற்றக்கூடிய மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல்கள் இடம்பெறும் பட்சத்தில் மாத்திரமே இது வெற்றியளிக்கும்.

மலையகத் தமிழர்களை ராஜபக்ச அரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டது ‘ரோ’ தான் – கோத்தா

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா பயணம் குறித்து எடுத்துரைப்பார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஜெனிவாவில் எதிர்வரும் 29 ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடரில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமனம் – பொன்சேகாவுக்கு மைத்திரி கொடுத்த பதிலடி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்குப் பதில் நடவடிக்கையாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலுக்குப் பின் அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா நம்பிக்கை

அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் பின்னர், சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார், அமெரிக்காவுக்கான சி்றிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம்.

முதலமைச்சர் எதிர்த்தாலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுமாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் நாளை சிறிலங்கா வருகிறார்

நியூசிலாந்து பிரதமர் ஜோன் பிலிப் கீ, ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார். நாளை தொடக்கம், வரும் 27ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான உடன்பாட்டை எதிர்ப்பவர்கள் துரோகிகள் – என்கிறார் ரணில்

இந்தியாவுடன் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார தொழில்நுட்ப உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.