மேலும்

நாள்: 18th February 2016

சரத் பொன்சேகாவின் நியமனத்துக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு

தேசியப் பட்டியல் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீனாவுடனான உறவுகள் குலையவில்லை – என்கிறது சிறிலங்கா

சீனாவுடன் தற்போதும் நெருக்கமான உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம.

லசந்த கொலை சந்தேகநபர்களில் ஒருவர் கப்டன் திஸ்ஸ – ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு?

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று நேற்று சிறிலங்கா காவல்துறையால் வெளியிடப்பட்ட – வரையப்பட்ட உருவப்படங்களில் ஒன்று சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் கப்டன் திஸ்ஸவுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவை மீண்டும் தழுவுகிறது சிறிலங்கா

எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை இணைத்து கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தை அமைக்கும் தனது நோக்கத்தின் ஒரு பகுதியாகவே சீனா, சிறிலங்காவில் அதிக அக்கறை காண்பித்து வருகிறது.

ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த இலங்கையர்களை தாயகம் திரும்ப சிறிலங்கா அதிபர் அழைப்பு

போரின் போது, சிறிலங்காவில் இருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்கள் அனைவரையும், மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

உள்ளக விசாரணையில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுவார் சரத் பொன்சேகா

சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ள உள்ளக விசாரணையில், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளியிடுவார் என்று, சிறிலங்கா அமைச்சர், சரத் அமுனுகம தெரிவித்தார்.

முக்கியமான முறைப்பாடுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப் போகிறதாம் பரணகம ஆணைக்குழு

முக்கியமான முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விசாரணைகளைத் துரிதப்படுத்தி இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு

இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள மக்களுக்கு உதவுவதாக மைத்திரியிடம் ஜேர்மனி அதிபர் உறுதி

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, திருப்தி வெளியிட்டுள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், வடக்கிலுள்ள மக்களின் நலன்களுக்காக ஜேர்மனி அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.