மேலும்

நாள்: 1st February 2016

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

இந்தியாவுக்கான அமெரிக்க உதவிகள் பிராந்திய மட்டத்தில் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்பதையே மையமாக கொண்டது. சீன தலையீடும் செல்வாக்கும் தெற்காசிய நாடுகளில் அதிகரித்திருக்கிறது .இதனால் தெற்காசிய நாடுகள் இந்திய – அமெரிக்க கூட்டுக்குள் அடங்காது கை நழுவிப்போவதை தடுப்பதிலே மிகவும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அதிகாரப் பகிர்வுக்கான திட்ட வரைவு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணும் வகையில், அதிகாரப் பகிர்வு யோசனை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை வெளியிட்டார்.

யோசித ராஜபக்ச இன்னமும் நிரபராதி தான் – என்கிறது சிறிலங்கா கடற்படை

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப்.யோசித ராஜபக்ச மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை, அவருக்கு எதிராக கடற்படை நடவடிக்கை எதையும் எடுக்காது என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தலுக்கு உத்தரவிட்ட முன்னைய அரசின் மூத்த அதிகாரி – புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவத்துடன், முன்னைய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தன் குடும்பத்தினரைத் தண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார் மகிந்த

தன்னை பழிவாங்குவதற்காக, தனது குடும்பத்தை தண்டிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

வெலிக்கடைச் சிறையில் யோசிதவுக்கு சிறப்பு வசதிகள் இல்லை

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவுக்கு, மேலதிக பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான மேலதிக சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும், சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.