மேலும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

anniversary-sugirdharajan (1)திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம், யாழ் ஊடக மையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சமன் வகஆரச்சி, தினகரன் நாளிதழ் பிரதம ஆசிரியர் கே. குணராசா, தினகரன் நாளிதழ் ஆலோசகர் எம். நிலாம், ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பாரதிராஜநாயகம்   மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

anniversary-sugirdharajan (1)anniversary-sugirdharajan (2)anniversary-sugirdharajan (3)anniversary-sugirdharajan (4)anniversary-sugirdharajan (5)

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. அரியநேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ. கலைஅரசன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

சுகிர்தராஜனின் ஊடக நண்பர்களின் நினைவலைகள், நினைவுப் பேருரை, ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அவர்களது உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆவணப்படம் வெளியீடும் இடம் பெற்றது.

திருகோணமலையில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான உண்மைகளை படங்களுடன் வெளியிட்டதால், சுடர்ஒளி, உதயன், வீரகேசரி, மெட்ரோ நியூஸ் ஊடகங்களில் பணியாற்றிய சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *