மேலும்

தமிழர்களின் இதயத்தை வென்றால் மட்டுமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- சிறிலங்கா அதிபர்

maithri-open-garments (1)உட்கட்டமைப்பு அபிவிருத்தியால் மட்டும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றும், தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதன் மூலமே அதனை அடைய முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் நேற்று ஆடைத்தொழிற்சாலை ஒன்றைத் திறந்து வைத்த பின்னர், காணாமற்போனோரின் உறவினர்களுடன் உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு செங்கலும் மோட்டாரும் அணுகுமுறை உதவாது என்றும் போரின் பின்னர் வடக்கில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ளத் தவறிவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

maithri-open-garments (1)maithri-open-garments (2)maithri-open-garments (3)

புதுக்குடியிருப்பில் நேற்று திறந்து வைக்கப்பட்ட ஹிர்ட்ராமணி ஆடைத் தொழிற்சாலையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 850 தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலர், போரில் தமது உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *