மேலும்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வரும் வரை அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை?

maithri-jenevan (1)பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றான புதிய சட்டம் கொண்டு வரப்படும் போது, சிறைகளில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுவிக்க முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் நேற்று ஆடைத்தொழிற்சாலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, அண்மையில் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்ட சிவராசா ஜெனீவன் மற்றும் அவரது பெற்றோரும் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

maithri-jenevan (1)maithri-jenevan (2)

அப்போது, சிறைச்சாலைகளில் எஞ்சியுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் ஜெனீவன் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தாம் கவனத்தில் கொள்வதாக உறுதியளித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு, கூடுதலான மனிதாபிமான நோக்கம் கொண்ட சட்டம் ஒன்றை வரையும் பணிகள் நடந்து வருவதாகவும், இந்த மாற்றம் இடம்பெறும் போது, சிறைகளில் உள்ள பலரையும் விடுவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வரும் வரை அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை?”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    தகவல் அறியும் உரிமைச்சசட்டம் திருத்தி அமைக்க பட்டாலும் முந்தின அமைப்பில் இருந்த சில உரிமைகள் கூட நீக்கப்பட்டு இருப்பதாகவும் சாதாரணமாக பாரிய கட்டுமான ஒப்பந்தத்தில் மோசடி என்று கருதினாலும் அந்த ஒப்பந்த காரரை விபரங்களை பகிரங்க படுத்தும்படி கேட்கும் உரிமை கூட பொதுமக்ககளுக்கு இல்லாது செய்யப் பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் அதுபோல் அவசரகால சட்ட திருத்தம் என்பதும் ஒரு பெயர் மாற்றம் மட்டுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *