மேலும்

நாள்: 14th September 2015

திருகோணமலையில் நடந்த கி.பி.அரவிந்தன் பற்றிய ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுகம்

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும் கவிஞருமான, கி.பி.அரவிந்தன் அவர்கள் பற்றி, பாலசுகுமாரால் தொகுக்கப்பட்ட ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுக நிகழ்வு நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்றது. 

விசாரணை அறிக்கை தொடர்பாக ஊடக மாநாட்டை நடத்துகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கை வரும் புதன்கிழமை வெளியிடவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதுபற்றிய ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளார்.

சிறிலங்காவுடன் இணைந்து தீர்மானம் கொண்டு வருவோம்- அமெரிக்கா அறிவிப்பு

சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் குறித்த செயல்முறைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து, அதன் இணக்கப்பாட்டுடனும்,  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆதரவுடனும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் பணியில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உண்மை ஆணைக்குழுவை அமைக்கப் போகிறதாம் சிறிலங்கா – ஜெனிவாவில் மங்கள வாக்குறுதி

சிறிலங்கா அரசாங்கம் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளது.

விசாரணை அறிக்கை மிகத்தீவிரத்தன்மை கொண்டது – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை நாளை மறுநாள் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இந்த அறிக்கையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் சிறிலங்கா குறித்த முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடு

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான பல முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடுமையான நிபந்தனையுடன் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை

ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் எக்காரணம் கொண்டும் வெளியே கசியவிடப்படக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கையின் முற்பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கையளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா நெருக்கடியில் இருந்து தப்பிக்க இரு அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்துகிறது சிறிலங்கா

ஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் இந்தமாதம் சமர்ப்பிக்கவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் மங்கள சமரவீர

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.