மேலும்

நாள்: 8th September 2015

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மைத்திரியுடன் பேச்சு

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குமா ஐ.நா அறிக்கை? – அமந்த பெரேரா

ஜெனீவா எங்குள்ளது என்பது தவராசா உத்தரைக்கு மிகத் துல்லியமாகத் தெரியாவிட்டாலும், சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சுவிசில் உள்ள  நகரில் மிக விரைவில் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்.

அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்

இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விரும்பாத எந்த தீர்வையும் ஏற்கமாட்டோம் – இரா.சம்பந்தன் உறுதி

தமிழ்மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் தாம் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் அடுத்தவாரம் நியமனம்

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம்  நிறைவடைந்து விடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

போர்க்குற்றங்களில், மகிந்த ராஜபக்சவோ  கோத்தாபய ராஜபக்சவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே ஜெனிவா செல்வது பற்றி முடிவு – சுமந்திரன்

ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்குப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி – பதவியேற்பு நிகழ்வு மீண்டும் ஒத்திவைப்பு

புதிய கூட்டு அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. நாளையே 5 அமைச்சர்கள், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.