மேலும்

நாள்: 29th September 2015

தரைவழிப் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் – சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆலோசனை

தமிழ்நாட்டையும், இலங்கைத் தீவையும்  தரைவழி பாலம் மற்றும் கடலடிச் சுரங்கம் மூலம் இணைக்கும் இந்தியாவின் திட்டம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆராயவுள்ளது.

ஊழல், நிதிக்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவுக்கு உதவவுள்ளது அமெரிக்கா

சிறிலங்காவில் ஊழல் மற்றும் ஏனைய நிதிக் குற்றங்களுக்குக்கு எதிராகப் போராடுவதற்கு, உதவும் 2.6 மில்லியன் டொலர் திட்டத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தில் நீதித்துறை பற்றிய கரிசனைகளே அதிகம் – சிறிலங்கா பிரதமர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக தீர்மானத்தை  முன்வைப்பது தொடர்பான பேச்சுக்களில், நீதித்துறை பற்றிய கரிசனைகளே அதிகமாக இருந்ததாகவும், சிறிலங்கா படையினர் தொடர்பான கரிசனைகள் அதிகம் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐ.நா அமைதிப்படையில் கூடுதல் சிறிலங்கா படைகளை இணைக்குமாறு மைத்திரி கோரிக்கை

சிறிலங்கா படையினரை, ஐ.நா அமைதிப்படையில் மேலதிகமாக இணைத்துக் கொள்வதற்கு, சிறிலங்காவும் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்கும் – கல்கத்தா ரெலிகிராப் தகவல்

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக கல்கத்தா ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா தீர்மானம் வலுவான அனைத்துலகத் தலையீட்டை உறுதிப்படுத்த வேண்டும்

சிறிலங்காவில் போரின் போது, இடம்பெற்ற மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறை, வலுவான அனைத்துலகத் தலையீட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் அமைய வேண்டும் என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜோன் கெரி – மைத்திரி சந்திப்பில் பேசப்பட்டது என்ன? – இராஜாங்கத் திணைக்களம் விளக்கம்

சிறிலங்காவில் ஜனநாயக சுதந்திரங்களை மீளமைப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலரின் விருந்துபசாரத்தில் மைத்திரி – ஒபாமா சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முதல்முறையாகச் சந்தித்துப் பேசினார்.

ஐ.நா பொதுச்சபையில் நாளை உரையாற்றுகிறார் மைத்திரி

தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

சிறிலங்கா சட்டங்களின் கீழேயே எல்லா விசாரணைகளும் நடக்கும் என்கிறார் ரணில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக,  விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறைகள் அனைத்தும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.