மேலும்

நாள்: 28th September 2015

பிரகீத் கடத்தல் குறித்து மேஜர் ஜெனரலிடம் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட நம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை் விசாரணை நடத்தியுள்ளனர்.

முழு உலகினதும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளாராம் மைத்திரி – பான் கீ மூன் பாராட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்தினதும் நம்பிக்கையை வென்றிருப்பதாகவும், அவரது செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

உள்ளகப் பொறிமுறையிலேயே விசாரணை – வெளிநாட்டு தலையீடு இருக்காது என்கிறார் ரணில்

மூன்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே நடத்தப்படும் என்றும், அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க அவுஸ்ரேலியா முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப் போவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

இந்திய- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா படைகள் நடத்தும், மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நாளை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு அண்மையில் உள்ள   அவுண்ட் இராணுவத் தளத்தில் ஆரம்பமாகவுள்ளது.