மேலும்

நாள்: 7th September 2015

வடகிழக்கு கரையோரக் காடுகளில் வெளிநாட்டுப் படையினருடன் சிறிலங்கா படைகள் போர்ப் பயிற்சி

வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்பதாக, சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து பாதுகாப்பு நாளைக் கொழும்பில் கொண்டாடியது பாகிஸ்தான்

சீனாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் சிறிலங்காவில் தனது பாதுகாப்பு நாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடியுள்ளது. பாகிஸ்தானின் 50ஆவது  பாதுகாப்பு நாள் நேற்று கொழும்பில் கொண்டாடப்பட்டது.

பிரகீத் கடத்தல்- மேலும் மூன்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்படிவம் தொடர்பாக மேலும் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனல்-4 காணாளி குறித்த சிறிலங்கா இராணுவத்தின் விசாரணை தீவிரம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடங்குவதற்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தில் காணப்படும் படையினரை அடையாளம் காணும் விசாரணைகளை சிறிலங்கா இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரின் இறுதியில் ஆட்டிலறிகளைப் பயன்படுத்தியது உண்மை – ஒப்புக்கொண்டார் சரத் பொன்சேகா

போரின் இறுதிக்கட்டத்தில் இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு, சிறிலங்காப் படையினர்  ஆட்டிலறிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த விசாரணைகளின் குறைபாடுகளை அம்பலப்படுத்தும் அறிக்கை

சிறிலங்காவில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐ.நாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்துள்ளது.

புதனன்று சிறிலங்காவின் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

சிறிலங்காவின் புதிய கூட்டு அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வரும் செப்ரெம்பர் 9ஆம் நாள்- புதன்கிழமை இடம்பெறவுள்ளது.