மேலும்

நாள்: 23rd September 2015

Mahinda-Rajapaksa

ஐ.நா அறிக்கையின் காரம் குறைக்கப்படவில்லை – என்கிறார் மகிந்த ராஜபக்ச

போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கோ கிடையாது என்றும், எனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ms-depature

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

India-emblem

கொழும்பு ஏற்கும் அளவுக்கு தீர்மான வரைவை பலவீனப்படுத்தும் இந்தியா? – இறுதிநேரத்தில் களமிறங்கும்

சிறிலங்கா தொடர்பாக ஜெனிவாவில் பரந்தளவிலான சம்மதத்துடன் கூடிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று நம்பகரமான புதுடெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

eagle-flag-usa

இரண்டாவது தீர்மான வரைவு இன்று வெளியாகும்- வெள்ளியன்று மீண்டும் கலந்துரையாடல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மான வரைவு அடுத்த வாரமே சமர்ப்பிக்கப்படும் என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

UNHRC

தீர்மான வரைவின் 4ஆவது பந்தி குறித்து ஜெனிவாவில் கடும் விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில் இருந்து, அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்யும், 4ஆவது பந்தியை நீக்க வேண்டும் என்று ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் நேற்றும் வலியுறுத்தியுள்ளன.

ravinatha aryasinha

அமெரிக்க தீர்மான வரைவில் 14 பந்திகளை நீக்குமாறு கோருகிறது சிறிலங்கா

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரை உள்ளிட்ட, 14 பந்திகளை, அமெரிக்கத் தீர்மான வரைவில் இருந்து நீக்க வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது.

CM-NPC

ஈனச்செயல்களே சிறிலங்கா அரசை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது – சி.வி.விக்னேஸ்வரன்

எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று சிறிலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ranil-parliament

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா பிரதமர் ரணில்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.