மேலும்

நாள்: 24th September 2015

UNHRC-meeting-room

இரண்டாவது தீர்மான வரைவை இன்று பேரவையில் சமர்ப்பிக்கிறது அமெரிக்கா

அமெரிக்கா தயாரித்துள்ள இரண்டாவது வரைவுத் தீர்மானம் குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், இன்று அந்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

us-congress-symbol

கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோன் கெரிக்கு கடிதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் பரிந்துரைத்துள்ளபடி, போர்க்குற்றங்கள், மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

sumanthiran

அமெரிக்காவுக்கு சுமந்திரன் அவசர பயணம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

rajitha-senarathna

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவு கிடைப்பது உறுதி – சிறிலங்கா நம்பிக்கை

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் யோசனைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் ஆதரவு கிடைக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Exercise Cormorant Strike VI - 2015’  (1)

மட்டு. புன்னைக்குடாவில் நேற்றுமாலை சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல்

சிறிலங்காவின் முப்படைகள், மற்றும் வெளிநாட்டுப் படையினர் என, 2900 படையினர் பங்கேற்ற நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் இறுதி நாளான நேற்று, மட்டக்களப்பு  புன்னைக்குடாவில் முப்படைகளும் பங்கேற்ற பாரிய தாக்குதல் பயிற்சி ஒன்று நேற்றுமாலை இடம்பெற்றது.

trincomalee oil farm

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுகிறது இந்தியா

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.