மேலும்

நாள்: 22nd September 2015

கி.பி. அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு

ஈழப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர் கி.பி. அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி அறிமுக நிகழ்வு, கடந்த சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரிலுள்ள ஞானலிங்கேச்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைக்கு உதவத் தயார் – ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த சிறிலங்காவுக்கு உதவ ஜேர்மனி தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பிராங் வோல்டர் ஸ்ரெய்மேய்யர் உறுதியளித்துள்ளார்.

மூன்றாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நிறைவு

புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டுபட்ட நிலையில் அனைத்துலக சமூகம் – ஜெனிவா கூட்டத்தில் நடந்தது என்ன?

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவுக்கு எதிராக – சீனா, ரஷ்யா, பாகிஸ்தான்,  கியூபா ஆகிய நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லையா? – ஐ.நா பேச்சாளர் பதில்

சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையா என்பது, நாம் பரிந்துரைத்துள்ள கலப்பு நீதிமன்றத்தை உள்ளடக்கிய குற்றவியல் விசாரணைகளின் பின்னரே கண்டறியப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணயகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நாளை நியூயோர்க் செல்கிறார் மைத்திரி

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

மங்களவும், விஜேதாசவும், மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவை காப்பாற்றியுள்ளனர் – ரணில்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுமே, மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பிரகீத் கடத்தல் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைமைக்குத் தெரியாதாம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தீர்மான வரைவை ஜெனிவாவில் சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.