மேலும்

நாள்: 21st September 2015

இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் ஆரம்பம்

மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையில் புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளது.

பொறுப்புக்கூறலை நோக்கி நகர்தல் – ஒரு இந்திய ஊடகத்தின் பார்வை

கடந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்பது போருக்குப் பின்னான சமூகங்களில் இலகுவாக இடம்பெறக்கூடிய ஒன்றல்ல. எனினும் இதற்கான தேவை மற்றும் அவசியமானது கைவிடப்பட முடியாத ஒன்றாகும்.

இறுதிப்போரில் 7000 பேரே மரணம் – ஐ.நா அறிக்கை மிகைப்படுத்தியதாக கூறுகிறார் மக்ஸ்வெல் பரணகம

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, சிறிலங்காவின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்றும், 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், காணாமற்போனோர் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராயும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

தீர்மான வரைவு குறித்து ஜெனிவாவில் இன்றும் நாளையும் கூட்டங்களை நடத்துகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவு தொடர்பாக, இன்றும் நாளையும் ஜெனிவாவில் முறைசாராக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

ஐ.நா அறிக்கை குறித்து சுதந்திரக் கட்சி, ஐதேக உயர்மட்டங்களில் ஆலோசனை

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை குறித்து, ஆராய்வதற்காக சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளது சிறிலங்கா சுதந்திரக் கட்சி.

உள்நாட்டு விசாரணைக்கு அனுமதியுங்கள் – அமெரிக்கா, உறுப்பு நாடுகளுக்கு சிறிலங்கா அவசர கடிதம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக , அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்குப் பதிலாக, உள்நாட்டு விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடமும், அமெரிக்காவிடமும், அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

கலப்பு நீதிமன்ற விவகாரம் – நாடாளுமன்றில் அவசர விவாதம் நடத்தக் கோருகிறார் விமல் வீரவன்ச

போர்க்குற்றங்கள் குறித்து கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், மனுவொன்றைக் கையளித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச.