மேலும்

நாள்: 1st September 2015

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும், என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக பொறிமுறை – வட மாகாணசபையில் தீர்மானம்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் முன்மொழியப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற கணவன் – மனைவி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், கணவனும் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மகிந்தவும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினரான, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சிறிலங்கா வரலாற்றில், அதிபராக இருந்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

சிறிலங்காவின் எட்டாவது  நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகராக கரு ஜெயசூரிய தெரிவு

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக, ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய சற்றுமுன்னர் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இல்லை – கூட்டமைப்புக்கு குழுக்களின் பிரதி தலைவர் பதவி

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுநாயக்கவின் ரமபோசாவுடன் இரகசியப் பேச்சு நடத்தப்பட்டதா? – மறுக்கிறது சிறிலங்கா

தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா, சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும், அவருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் முடுக்கிவிடப்பட்டுள்ள சிறிலங்காவின் இராஜதந்திர நகர்வுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு எதிர்வரும் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இராஜதந்திரச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.