மேலும்

நாள்: 4th September 2015

தென்னாபிரிக்க அதிபர் சூமாவை கட்டுநாயக்கவில் சந்தித்துப் பேசினார் மங்கள சமரவீர

சீனா செல்லும் வழியில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

திணைக்கள அதிகாரிகளை அமைச்சர்கள் நியமிக்க முடியாது – மைத்திரி அதிரடி உத்தரவு

அரசாங்க நிறுவனங்களில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான முடிவுகள், குழுவொன்றினாலேயே மேற்கொள்ளப்படும் என்றும், அமைச்சர்கள் தன்னிச்சையாக நியமனங்களை மேற்கொள்ள முடியாது என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

அமெரிக்க செனட்டின் உயர் அதிகாரிகள் சிறிலங்காவில் – அரசதரப்பு, கூட்டமைப்புடன் சந்திப்பு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சி பிரதம கொரடா பதவியை ஜேவிபிக்கு விட்டுக் கொடுத்தது கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜேவிபிக்கு விட்டுக் கொடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சந்திரிகாவிடம் மோடி உறுதி

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய அமைச்சர்கள் இரண்டு கட்டங்களாக இன்று பதவியேற்கின்றனர்

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடக்கவுள்ள முதற்கட்ட நிகழ்வில், அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பதவியேற்கவுள்ளனர்.