மேலும்

நாள்: 13th September 2015

பதவி பறிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க காத்திருப்பு நிலைக்கு அனுப்பப்பட்டார்

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க எந்தப் பதவியும் வழங்கப்படாமல், காத்திருப்பு நிலைக்கு (pool) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நாளை பிற்பகல் புதுடெல்லி செல்கிறார் ரணில் – மோடியுடன் பேச்சு, மதிய விருந்துக்கு ஏற்பாடு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூன்று நாள் அதிகாரபூர்வ இந்தியப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் பல உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆர்வம்மிக்க அமர்வாக இருக்கும் – ஐ.நா மனித உரிமை பேரவைத் தலைவர்

ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஆர்வம்மிக்கதொன்றாக அமையும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ரூக்கர் தெரிவித்துள்ளார்.

துணை ஆயுதக்குழுவுக்கு மகிந்த அரசு வழங்கிய 1000 துப்பாக்கிகள் – சிஐடி விசாரணையில் அம்பலம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால், ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று பகிரங்கமாக வெளியிடப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை?

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சம்பந்தன் அவசர கடிதம் – ஜெனிவாவில் சந்திக்கவும் திட்டம்

போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் சென்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பையும் கடுமையாக சாடும் ஐ.நா அறிக்கை – எவரையும் போர்க்குற்றவாளிகளாக பெயரிடவில்லை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், எவரது பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.