திருமலை கடற்பரப்பில் இந்திய- சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் போர்ப்பயிற்சி
திருக்கோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்றுக்காலை பாரிய போர்ப்பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.
திருக்கோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்றுக்காலை பாரிய போர்ப்பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.
தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்பேன்’ என கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பாளரான 50 வயதான கிறிஸ்ரி சாந்தினி தெரிவித்தார்.
பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு பயிற்சிக்காக வந்துள்ளன.
கோடரியால் தலையில் வெட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன ஆபத்தான நிலையில், பொலன்னறுவவில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
தமது அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மீள ஆரம்பிக்கப்படும் என்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
முக்கியமான நோக்கத்தை நிறைவேற்ற சிறிலங்கா- சீன உறவை, மீண்டும், ஊக்குவித்து மேலுயர்த்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீன அதிபர் ஜி ஜின்பின் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு பீஜிங் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சீனத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட முதல்தொகுதி வீடுகள், இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடைபெற்றது.
சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன், கைகுலுக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறுப்புத் தெரிவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.