அமெரி்க்காவின் பசுபிக் கப்பல்படைத் தளபதி சிறிலங்காவில்
அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் சுவிவ்ற் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் சுவிவ்ற் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான ‘காலி கலந்துரையாடல்-2017’ இன்று கொழும்பில் உள்ள கோல்பேஸ் விடுதியில் ஆரம்பமானது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
இங்கிலாந்து ஒக்ஸ்போட் கல்லூரியில் படித்து நோபல் பரிசு பெற்றவர்களது உருவப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பது வழக்கம். அவ்வாறு வைக்கப்பட்ட படங்களில் இருந்து அந்த கல்லூரியின் பழைய மாணவி பர்மிய அரசியல் தலைவர் ஓன் சான் சூகி அவர்களின் உருவப்படத்தை நீக்கி களஞ்சியத்தினுள் வைத்து விட்டது அந்த கல்லூரி நிர்வாகம்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளில் பங்கேற்பதற்காக நேற்று திருப்பதி வந்தடைந்தார். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரது துணைவியாருடன், நேற்று திருப்பதி வந்தார்.
சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த றிப்கான் பதியுதீன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.
அம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டு எதிரணியினரை சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டும், கலைத்தனர்.
அரசியலமைப்பின் ஊடாக பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியக அமைச்சர் மார்க் பீல்ட் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.