மேலும்

பதவி விலகினார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்

Rifkhan Bathiudeen resignedஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த  றிப்கான் பதியுதீன் வடக்கு  மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 107 ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள அவைச் செயலகத்தில், இடம்பெற்றது.

இதன்போது, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம், தனது பதவி விலகல் கடிதத்தை றிப்கான் பதியுதீன் கையளித்துள்ளார்.

கட்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய தாம் பதவியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Rifkhan Bathiudeen resigned

பதவி விலகியுள்ள றிப்கான் பதியுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் சகோதரராவார்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணசபை உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *