மேலும்

இந்தியத் துணைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் – 28 பேர் கைது

hambantota-protest (1)அம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டு எதிரணியினரை சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டும், கலைத்தனர்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டு எதிரணியினர் இன்று அம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, டி.வி.உபுல், அருந்திக பெர்னான்டோ, குமார் வெல்கம, மகிந்தானந்த அழுத்கமகே, சமல் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

hambantota-protest (2)

hambantota-protest (3)

hambantota-protest (1)

இந்திய துணைத் தூதரகம் முன்பாக, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டும், விரட்டியடித்தனர்.

இதன் போது மூன்று சிறிலங்கா காவல்துறையினர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *