மேலும்

அமெரி்க்காவின் பசுபிக் கப்பல்படைத் தளபதி சிறிலங்காவில்

Admiral Scott H. Swift -atulஅமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் சுவிவ்ற் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று ஆரம்பமான, சிறிலங்கா கடற்படையின் ‘காலி கலந்துரையாடல்-2017’ கடல்சார் கருத்தரங்கில் பங்கேற்கவே அவர் சிறிலங்கா வந்துள்ளார்.

அட்மிரல் சுவிவ்ற் நேற்று, காலி  கலந்துரையாடலில், ‘பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதற்கு நம்பிக்கை அடிப்படையிலான கடல்சார் உறவுகள்’ என்ற தொனிப் பொருளில் உரையாற்றியிருந்தார்.

Admiral Scott H. Swift -atul

அதேவேளை, அமெரிக்காவின் பெறுமானங்களை காலி கலந்துரையாடலில் வலியுறுத்துவதற்காக அவர் சிறிலங்கா வந்திருப்பதாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *