மேலும்

Archives

எதிர்ப்பை மீறி யாழ். வந்தார் மைத்திரி – முடிவை மீறி வடக்கு அமைச்சரும் நிகழ்வில் பங்கேற்பு

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி இன்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் முற்றாக செயலிழந்தது.

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர்

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், பிரதி உதவிச் செயலர் கேணல் ஜோ பெல்டர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய- சிறிலங்கா இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும், மித்ரசக்தி-2017 கூட்டுப் பயிற்சி, இன்று இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் ஆரம்பமாகவுள்ளது.

சிறிலங்கா கடற்படையில் விமானப்படைப் பிரிவை உருவாக்கத் திட்டம்

சிறிலங்காவின் கடல் எல்லைகளை கண்காணிக்கும், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன வலியுறுத்தியுள்ளார்.

இடைக்கால அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது – சிறிலங்கா அதிபரிடம் கோரிய வீரவன்ச

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலரைச் சந்தித்தார் மங்கள

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் தோமஸ் சானொனை, சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ருவான் விஜேவர்த்தனவுடன் பிரெஞ்சு கூட்டுப்படைத் தளபதி சந்திப்பு

இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பியாட்டன் (Rear Admiral Didier Piaton) சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக போராட்டம் – நாமல் ராஜபக்ச இரவோடு இரவாக சிறையில் அடைப்பு

நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

மகாநாயக்கர்கள் தவறான புரிதல்களைக் களைய வேண்டும் – விக்னேஸ்வரன் செவ்வி

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான  சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார்.