மேலும்

Archives

ஆழிப்பேரலை வதந்தியால் வடக்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில் பதற்றம்

ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படப் போவதாகப் பரவிய வதந்தியை அடுத்து, வடக்கு- கிழக்கு கரையோரப் பகுதிகளில் இன்று மக்கள் மத்தியில் பதற்றமான நிலை காணப்பட்டது.

3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இன்று காலை பாரிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

சீன கடற்படைக் கப்பல் புறப்பட்டது – அவுஸ்ரேலிய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீன கடற்படைக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை விட்டுப் பறப்பட்டுச் சென்ற அதேவேளை அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

நிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் – பாகம் : 2

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் பொறிமுறையையும், அரசியல் அமைப்பு மாற்றத்தையும் ஊக்கப்படுத்தும் சில மேலைதேய இராஜதந்திரிகள் அரச உதவியுடன், மக்கட்பரம்பல் சமநிலையை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு தமிழ்நாட்டில் கரையொதுங்கியது

சிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட 18 அடி நீளமான மீன்பிடிப் படகு ஒன்று, தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியுள்ளது.

மகிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரி அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது

அரசாங்க நிதியை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின்,  தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய காமினி சேனாரத் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

துயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை

மாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை  மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் – ஏபி வெளியிட்டுள்ள படங்கள்

சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ்.

வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு – தயார் நிலையில் அதிகாரிகள்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மிகக் கடுமையான மழையும் கடும் காற்றும் இருக்கும் என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் சிறிலங்கா வருகை

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு  ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.