பலத்த பாதுகாப்புடன் மூகாம்பிகையை தரிசித்தார் சிறிலங்கா பிரதமர்
நான்கு நாட்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று உடுப்பியில் உள்ள, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று தரிசனம் செய்தார்.
நான்கு நாட்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று உடுப்பியில் உள்ள, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று தரிசனம் செய்தார்.
சிறிலங்கா மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலையாகி விளக்கமளித்தார்.
காலி – ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டவில், முஸ்லிம்களுக்கு எதிராக நேற்றிரவு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர், அலிஸ் வெல்ஸ் அம்மையாரை, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, அவ்வாறான இடங்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகளை ஒரே இரவில் செய்து விட முடியாது என்றும், உலகில் எந்தவொரு நாடும், இந்த விடயத்தில் சரியாகச் செயற்படும் நிலையில் இல்லை என்றும் சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
புத்தரின் படத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணிக்கு, 6இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு சிறிலங்கா உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவருமான, சந்திரிகா குமாரதுங்க, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.