மேலும்

பலத்த பாதுகாப்புடன் மூகாம்பிகையை தரிசித்தார் சிறிலங்கா பிரதமர்

ranil-uduppiநான்கு நாட்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று உடுப்பியில் உள்ள, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று தரிசனம் செய்தார்.

அரசிரூர் உலங்குவானூர்தி தளத்தில் நேற்றுக்காலை 10.30 மணியளவில் வந்திறங்கிய சிறிலங்கா பிரதமர், அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஆலயத்துக்கு வாகனத்தில் சென்றார்.

நேற்றுக்காலை 11 மணியளவில் ஆலயத்தில் அவர் வழிபாடுகளை ஆரம்பித்தார்.

தனது துணைவியார் மைத்ரி விக்கிரமசிங்கவுடன், ஆலயத்துக்கு வந்த சிறிலங்கா பிரதமருக்கு நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க அங்கு மூன்று நாட்கள் நடைபெறும், சட்ட சண்டிக யாகத்திலும் பங்கெடுத்தார்.

ranil-uduppi

சிறிலங்கா பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆலயத்துக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் இருந்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆலயத்தைச் சுற்றியும் நகரப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *