ரட்ணசிறி, டி.எம்.ஜெயரட்ணவை ஆலோசகர்களாக நியமித்தார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகர்களாக, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் டி.எம்.ஜெயரட்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகர்களாக, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் டி.எம்.ஜெயரட்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காலத்திற்கு முன்னர் மைத்திரி அரசாங்கம் தேர்தலை நடத்தி, பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கினால், இவ்வாறான போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான திட்டத்தை மைத்திரிபால சிறிசேன வரையமுடியும்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை சிறப்பு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணம் மிக முக்கியமானது என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக சிறிலங்கா காவல்துறையின் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கடந்த ஜூன் முதலாம் நாள் தொடக்கம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் என்ன நடக்க வேண்டும் என்பதை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ தீர்மானிப்பதில்லை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியுமே தீர்மானிக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம் ஊடாக துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகளையும், சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தான் கடமைப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.